ஆரோக்கியம் என்றும் இலவசமே!
நம் உடலானது தனது தேவைகளை உணர்வுகள் மூலமாக வெளிப்படுத்தும். உதாரணமாக பசி, தாகம், ஓய்வு போன்ற உணர்வுகள் நம் உடலால் தனது தேவைக்கேற்ப வெளிப்படுபவை. அவற்றை உடல் கேட்கும்போது நாம் கொடுத்தாலே போதுமானது. ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் உடலின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு நாம் நமது உடலின் இயக்கத்திற்கு நிபந்தனையின்றி போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியப்படும்.
உடலின் அடிப்படை இயக்கத்தை புரிய வைக்க "நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?" https://t.me/OurBodyitselfaDoctor என்னும் குழுவை Telegram செயலியில் சில வருடங்களாக நடத்தி வருகிறேன். அதன் நோக்கம் மக்களுக்கு உடலின் அடிப்படை இயக்கத்தை புரியவைத்து ஆரோக்கிய வாழ்வை சாத்தியப்படுத்துவதே. உடலின் இயக்கம் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்தவும் அந்த புரிதல் இல்லாமல் நாம் எவ்வாறு அதற்கு எதிராக செயல்படுகிறோம் என்று பல கட்டுரைகள், ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளில் விளக்கியுள்ளேன். அவற்றை நீங்கள் Youtube மற்றும் Telegram இல் காணலாம்.
- விழிப்புணர்வு வினீத்